பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-29 11:42:46] தாம் உண்ணாவிரதம் இருந்தபோது மக்டொனால்ஸ் பேகரை சாப்பிட்டதாக பொய்யான செய்திகளை வெளியிட்ட பிரித்தானிய பத்திரிகைகளான, டெய்லி மெயில், சன் பத்திரிகை மீது பரமேஸ்வரன் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் இவ் இரு பத்திரிகைகளும் பொய்யான செய்திகளை வெளியிட்டதை ஒப்புக்கொண்டு மன்னிக்ப்புக் கோரியுள்ளனர். தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திய இவ் இரு பத்திரிகைகளும், பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளது.
|