வன்னி பற்றிச் சொல்கிறார் உதவும் கரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-29 11:35:32] இறைவா இதென்ன சோதனை சொந்த மண்ணில் தமிழர்கள் உடுத்த துணியில்லாமல், குளிக்க நீர் இல்லாமல் நோய் தீர்க்க மருந்தில்லாமல், கூரையில்லா வீடுகளில் விலங்குகள் போல் அடைபட்டு, அடிபட்டு வாயிருந்தும் ஊமைகளாய், அடிமைகளாய், உயிர் வாழும் தமிழர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்காமல் திரும்பத்தான் முடியுமா? இவ்வாறு கூறினார் விஜயன் சுப்பிரமணியம் எனும் உதவும் கரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்.
பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தினம் வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்து பல நாட்கள் நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். அண்மையில் சி.என்.என் செய்திப்படம் ஒன்றைப் பார்த்த நான் ஈழத்தில் தமிழ் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று ஆறுதல் கூறி உதவி செய்ய வேண்டும் என்று எனக்குள் சபதம் எடுத்துக் கொண்டேன் எக்கிறார் மஞ்சோங் உதவும் கரங்கள் தலைவர் விஜியன் சுப்பிரமணியம்.
கையில் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு என் மனைவியிடமும் பெற்றோர்களிடமும் என் தமிழ் மண்ணில் முதன் முதலாக காலடி வைக்க செல்கிறேன். நான் திரும்பி வருவது பற்றி உறுதி சொல்ல மாட்டேன். என்ன நடந்தாலும். நாங்கள் எல்லோரும் தாங்கிக் கொள்ளுங்கள் என்று சமாதானம் கூறிவிட்டு என் நண்பர் இராஜவுடன் ஜொகூர் ஜி.எப்.ஏ இயக்க நண்பர்கள் பாபுஜி, இராஜசேகரன், ஜெகன், குமார், மற்றும் பிரேம் ஆகியோருடன் கடந்த வாரம் 18ம் திகதி காலை கோலாலம் பூரிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம் என்றார் அவர் என்னுடன் வந்த அத்தனை பேரும் வாலிபர்கள் பலசாலிகள், தைரியம் மிக்கவர்கள் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டாதவர்கள். துப்பாக்கி தோட்டாவுக்கும் அஞ்சாதவர்கள் என்றார் விஜியன்.
இலங்கை நேரப்படி பண்டார நாயகே அனைத்துலக விமான நிலையத்தில் காலை 8.00 மணியளவில் இலங்கை கொழும்பில் காலடி வைத்தோம். நூங்கள் இலங்கைப் பற்றி கேள்வி பட்டதெல்லாம் நினைவிற்கு வந்தது. தைரியத்தை வளர்த்துக் கொண்டு விமான நிலையத்தை விட்ட வெளியே வந்தோம். எங்களுடைய சிந்தனையெல்லாம் தமிழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏதாவதொரு வழியில் உதவிகள் செய்ய வேண்டும் என்பதே.
18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் கொழும்பில் உள்ள தமிழர் கடையில் பசியாறினோம். நம் தமிழன் உதவும் கரங்கள் சட்டையைப் பார்த்த இலங்கைத் தமிழர்கள் சிலர் சந்தோஷப்பட்டனர். சிலர் தமிழில் பேசவே பயந்தனர் சிலர் அருகில் வந்து விசாரித்ததுடன் இங்கே நிறைய சிங்கள உளவாளிகள் உள்ளனர் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று அன்புடன் எச்சரித்தனர்.
நல்லவர்களும் இருக்கிறார்கள் நம்பிக்கையும் தைரியமும் எங்களிடம் கூடவே இருந்தது. பசியாறியதும் வவுணியாவிற்கு இரயில் பயணம் மேற்கொண்டோம். கொழும்பு மாநகரம் மலேசியா போல் அழகாக இருந்தது. அதனை விட்டு யாழ்பாணம் சென்றபோது எங்களுடைய கண்கள் குளமாகின. சோகம் கப்பியது இரவு 8.00 மணிக்குப் பிறகு வவுணியாவில் இறங்கி அங்குள்ள பிரபல நல்லி தங்கத்தில் தங்கினோம் முன்னதாக எங்களை சிங்கள இராணுவ வீரர்கள் 3 மணி நேரம் தடுத்து நிறுத்தி இலங்கையில் சுற்றிப் பார்க்க எத்தனையோ நல்ல இடங்கள் இருந்தும் இங்கே ஏன் வந்தீர்கள்? ஏன்று கேள்வி கேட்டு மிரட்டினர்.
இது உங்களுக்கு தேவையில்லாத கேள்வி. நாட்டிற்குள் சுற்று பயணிகள் வரக்கூடாது என்று விமான நிலையத்தில் யாரும் சொல்லவில்லையே..... வந்த பின் ஏன் இங்கே வந்தீர்கள்? என்று கேட்கலாமா என்று நாங்கள் விடாமல் பேசினோம் நல்ல வேளையாக எங்களோடு வந்த வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.சிவசக்தி ஆனந்தன் உதவினார்..
மறுநாள் காலை தமிழ் ஈழ மண்ணில் வன்னி பகுதி முகாமுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். இறைவா இதென்ன சோதனை சொந்த மண்ணில் தமிழர்கள் உடுத்த துணியில்லாமல், குளிக்க நீர் இல்லாமல் நோய் தீர்க்க மருந்தில்லாமல், கூரையில்லா வீடுகளில் விலங்குகள் போல் அடைபட்டு, அடிபட்டு வாயிருந்தும் ஊமைகளாய், அடிமைகளாய், உயிர் வாழும் தமிழர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்காமல் திரும்பத்தான் முடியுமா?
விஜியன் கண் கலங்க விளக்கினார். போரில் தமிழ் ஈழப் பகுதிகளான வன்னி, மன்னார், கிளிநொச்சி, பகுதிகள் சிங்கள இராணுவ விமானங்களின் குண்டு வீச்சில் தரைமட்டமாக கிடக்கின்றன. மனிதாபிமானமே இல்லாமல் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அங்குள்ள நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உண்மையில் எங்களுடைய உதவும் கரங்கள் 7 பேரிடமும் அன்புடனும் நம்பிகையுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தமிழ் மக்களுடன் நேரில் பேச உதவினார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது உடனடித் தேவை உடுத்த துணி, மருந்து, உணவு, பள்ளியை சிரமைத்து மாணவர்களுக்கு புத்தகங்கள் பொருட்களாக கிடைக்க வேண்டும்.
பணமாக கொடை வழங்குவோர் ஏமாற்றமடைவதாக கூறப்படுகிறது. காரணம் ரொக்கப் பணம் முறையாக போய் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு சேருவதில்லையாம் என்றும் விஜியன் சுப்பிரமணியம் விளக்கினார்.
இதற்கிடையே தமிழர்களின் இடங்களில் சிங்கள மக்களை கொண்டு வந்து குடியமர்த்தும் திட்டத்தை இலங்கை ராஜபக்ச அரசு வேகமாக செய்து வருகிறதாம். இதற்கு உடந்தையாக திடிரென சீனர்கள் வேலையாட்கள் என்ற பெயரில் குவிக்கப்பட்டு வருகின்றனராம்.
தமிழ் மண்ணில் தமிழர்களின் வீடுகளில் வாலிபர்களை காணமுடியவில்லை. சிறுவர்கள் அல்லது வயதான கிழவர்கள் மட்டுமே உள்ளனர். வாலிபர்களால் சிங்கள படையினர்களுக்கு மிரட்டல் ஏற்படும் என்ற எண்ணத்தில் அவர்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும் கூறினார் விஜியன்.
ஏராளமான வாலிபர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை அண்மையில் தாம் சி.என்.என் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
பெற்றோர்களை இழந்த பிள்ளைகளையும் கால் முடங்களாக நடையை மறந்து குடிசையில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களையும் பார்க்கும் கண்கள் என்ன பாவம் செய்ததோ. சொல்லி கண்ணீர் விட்டார் விஜியன்.
எங்களால் முடிந்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சிவசக்தி ஆனந்தன் மூலமாக வவுனியாவில் நாங்களே ஏராளமான பொருட்கள் வாங்கி சென்று முள்வேலியின் நடுவில் குடியிருக்கும் மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் வழங்கினோம்.
அவர்களுடைய குடிசைக்குள்ளும் சென்று வந்தோம். வாழ்க்கையில் போராடும் நம்ம சொந்த இனத்தை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது என்றார் அவர். முஞ்சோங் உதவும் கரங்கள் இங்கேயும் நிறைய சேவையாற்றி வருகிறார்கள். இந்த ஒரு வார கால யாழ்பாண பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றார் விஜியன்.
|