Breaking News:
  • இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!
  • அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஏல் குணசேகர தெரிவிக்கின்றார்!
  • பொன்சேகாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதனால், இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஒத்தி வைப்பு!
  • அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளை எதிர்க்கட்சிகள் எதிர்க்கக் கூடாது என்கிறார் சஜித் பிரேமதாஸ!
  • ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்ட 5 குழந்தைகள் உள்பட 53 இலங்கை தமிழர்கள் மீட்பு!

இணையத்தளங்கள்

ஈழதேசம்
யாழ்
பரந்தன்
பதிவு
அதிர்வு
சங்கதி
ஈழநேசன்
முரசம்
செய்தி
வேம்படி
வெப்தமிழன்
லங்கஸ்ரீ
மீனகம்
தமிழ்க் கதிர்
வெப் ஈழம்
பாடு மீன்
தமிழ் மணம்
நினைவுகள்
பரிஸ் தமிழ்
நெருடல்
குளோபல் தமிழ்
எதிரி
அரசன் டிவி
ஈழமண்
சங்கமம்
உயர்வு
ஈழம் ரைம்ஸ் New
நிதுஸ்
Tamilnewsinfo.com New
ஈழம் சூன்
Eelamweb
Eelamwebsite
ஆதவன்

விளம்பரங்கள்

 
 
 
 
 
 
 

இன்று :
முகப்பு
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியவர்களின் பெயர்களை தேர்தல் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-29 11:15:40]

யாழ்ப்பாணததை விட்டு வெளியேறியவர்களின் பெயர்களை தேர்தல் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண வாக்காளர்களின் பெயர்களை இடாப்பிலிருந்து நீக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தேர்தல் செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 722000 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 816000 மாக உயர்வடைந்ததாகவும், இதில் பலர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 400000 மாகக் காணப்படலாம் என பெபரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கைகளில் குடாநாட்டு மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தவறியுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்தளவிலான மக்களிடமே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நிலவி வரும் நடைமுறைச் சிக்கல்களினால் வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நீடிக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். பிரதேச மக்களின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கு அரசியல் கட்சிகளும் அதிக நாட்டம் காட்டத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Etamil24.com All Rights reserved 2010 Contact: info@etamil24.com