முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் தொடர்புகளுக்கு
2Tamil Home
போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? - இதயச்சந்திரன்
[Friday, 17/02/2012 03:23 PM]

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 
இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது.

கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. 'இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு' என்பதனை அமெரிக்கத் தரப்பினரிடம் கூட்டமைப்பினர் உறுதிபடத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு தெளிவானதொரு அரசியல் நிலைப்பாட்டினை முன்வைக்காமல் பின்னடிப்பதாக விமர்சனங்கள் எழுவதை அண்மைக்காலமாகக் காணலாம்.

இருப்பினும் ஸ்டீபன் ராப், றொபேர்ட் ஓ பிளேக், மரியா ஒட்டோரோ போன்ற அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பயண நிகழ்ச்சி நிரலில், நிரந்தரத் தீர்வு குறித்த விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றினை மேற்குலக அணியினர் கொண்டுவந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதாகவே அது அமையுமென அமெரிக்க பிரதிநிதிகள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.

இந்நிலையில், பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமைப் பேரவையை ஆட்டிப்படைக்கும் வல்லரசாளர்கள், சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்கிற தீர்மானத்தை முன்மொழியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு, பேரவையிலுள்ள 47 நாடுகளில் பெரும்பான்மையானவை ஆதரவு வழங்கும் வாய்ப்புண்டு.

அதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டு மென்கிற தீர்மானத்தை முன்வைத்தால், சீனா. இரஷ்யா மற்றும இந்தியா சார்பு நாடுகள் அதனைப் பலமாக எதிர்க்கும் நிலை தோன்றும். அதற்கான அணிதிரட்டலில், வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிசின் தலைமையில் ஆபிரிக்காவிற்கும் கிழக்கு ஆசியாவிற்கும் பல குழுக்கள் சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.

பிரிக்ஸ் (BRICS) எனப்படும் பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்கிற வளர்ச்சியுறும் பொருண்மிய ஆதிக்க நாடுகளின் ஆதரவைக்கொண்டு, மேற்குலகின் வியூகத்தை இலகுவாக உடைத்துவிடலாமென அமைச்சர் டி.யூ.குணசேகரா அண்மையில் தெரிவித்த கருத்து நோக்கப்பட வேண்டிய தொன்றாகும். புவிசார் அரசியலில், மாறிவரும் உலக ஒழுங்கு, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களிற்கு சாதகமாக அமைவது போல் தெரியவில்லை.

தேசிய இனப் பிரச்சினையை தமது பிராந்திய, பூகோள நலன்களை அடைவதற்கானஅழுத்தக் கருவியாக இவ் வல்லரசுகள் பயன்படுத்துவதை மனித உரிமைப் பேரவையில் காணலாம். சிரியாவிற் கெதிராக அரபு லீக்கின் துணையோடு, பாதுகாப்புப் பேரவையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டபோது, சீனாவும், இரஷ்யாவும் தமது வீட்டோ என்கிற இராமபாணத்தை ஏவி, அதனை முறியடித்தன.

பேரவையின் 15 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 13 நாடுகள் சிரியாவிற்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தாலும் அத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை விவகாரத்திலும் , இதே விதமான மோதல் நிலைமை வேறு பரிமாணத்தில் காணப்படுகிறது. இங்கு மேற்குலகம் - இந்தியா என்ற வழுவழுத்த உறவுநிலை, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படுகிறது. இலங்கை மீது மேற்குலகம் அழுத்தம் கொடுக்கும் போது, அதிலிருந்து விடுபட, தன்னாலான உதவிகளைச் செய்ய முடியுமென்கிற செய்தியைக் கூறியவாறு, மகிந்த அரசோடு நெருங்க முயல்கிறது இந்தியா.

இக் கருத்தியலின் அடிப்படையில், சுயாதீன சர்வதேச விசாரணை என்கிற இலங்கை உடனான உறவு முறிவு நிலைப் போக்கினை மேற்குலகம் மேற்கொண்டால், நிச்சயம் அதனை இந்தியா எதிர்க்கும். ஆகவேதான், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டு மென்கிற அழுத்தத்தைக் கொடுக்க, மேற்குலகம் முயற்சிக்கிறதெனலாம். இதனூடாக இலங்கை அரசின் மீது சர்வதேச நெருக்கடியை உருவாக்கி, ஆட்சிமாற்ற மொன்றினை ஏற்படுத்த மேற்குலகம் விரும்புகிறது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவாகியுள்ள கடன் நெருக்கடி, ஏனைய உலக நாடுகளிலும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். ஈரான் மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடை நகர்வால், இலங்கையில் பெற்றோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் கடன் தொகை அதிகரிப்பதால், கடன் பெறும் அளவை 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்குமாறு பாகிஸ்தானுடன் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜீத் நிவாட் கப்ரால்.

தேவையில்லையென்று அடம் பிடித்த, சர்வதேச நாணய நிதியத்தின் எட்டாவது தவணைக் கொடுப்பனவான 800 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தருமாறு கெஞ்சுகிறது இலங்கை அரசு. அத்தோடு யாழ்ப்பாணம் செழிப்புறுகிறது என்று, என்னதான் கண்காட்சிகளை அரசு நடத்தினாலும், மக்கள் மீது செலுத்தப்படும் வரிச்சுமை குறைவடையவில்லை. இதற்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் ஆளுமை இரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்கிற யதார்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்கிறது.

ஆகவே விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட மகிந்த அரசு மீது பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவு பலமாக இருப்பதால், அதே யுத்தத்தை வழிநடத்திய சரத்பொன்சேகாவினால் மட்டுமே, மகிந்தவிற்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுக்க முடியுமென மேற்குலகம் கருதுவதை நோக்கலாம்.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தோல்வியுற்ற நிலையில், இரண்டாவது தடவையாக அவரை களமிறக்கும் முயற்சியைத் தவிர வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை. ஆனால், போர்க்குற்ற விசாரணை என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தி, சிறையிலிருக்கும் பொன்சேகாவை வெளியில் கொண்டுவர முடியுமாவென்று முயற்சித்துப் பார்க்கிறது மேற்குலகம். இந்த வியூகத்தை முறியடிப்பதற்காகவே, மன்னிப்புக் கோரினால் விடுதலை செய்வோமென, பல தூதுவர்களை அனோமா பொன்சேகாவிடம் அரசு அனுப்பிக் கொண்டிருக்கிறது.

மன்னிப்புக் கேட்டு அடிபணிந்து சென்றால், அதனையே பெரும் பரப்புரையாக மாற்றி விடலாமென்று மகிந்தர் எண்ணியிருந்தார். ஆனாலும், மன்னிப்புக் கோராமலே, அவரை வெளியில் கொண்டுவரும் வழிவகைகள் எம்மிடம் உண்டென மகிந்த எதிர்ப்பு வல்லரசாளர்கள் சத்தியம் செய்ததால், அத்தகைய சரணடைவுப் பாதையை அனோமா கொம்பனி கைவிட்டு விட்டார்கள் போல் தெரிகிறது.

ஆகவே தமிழ் மக்களைவிட, அனோமா பொன்சேகா குழுவினரே மனிதஉரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்று நம்பலாம். இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது ஓரிரு தினங்கள் பின்பாகவோ சரத்பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால். மேற்குலகின் தீர்மானங்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கைவிடப்படும் சாத்தியப்பாடு உண்டு.

நன்றி :ஈழமுரசு

14-Feb-2012

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள்!
[Wednesday, 22/05/2013 04:38 AM]
புலிகளுக்கு எதிரான போரும்.....! புள்ளி விபரங்களும்....!
[Sunday, 19/05/2013 10:50 AM]
எல்லைக் கோட்டைத் தாண்டுமா இந்தியா?
[Sunday, 19/05/2013 10:48 AM]
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும், இலங்கையும்!
[Tuesday, 14/05/2013 04:29 PM]
அதிகாரத்துடன், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வார்!- ச. வி. கிருபாகரன்
[Sunday, 12/05/2013 01:54 PM]
மாலைதீவில் அமெரிக்கத் தளம்! இலங்கைக்கு அடிக்கும் காய்ச்சல்!
[Sunday, 12/05/2013 04:28 AM]
புலனாய்வு அமைப்புகளின் மோது களமாகியுள்ள இலங்கை!
[Monday, 06/05/2013 09:39 AM]
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
[Sunday, 05/05/2013 11:42 AM]
வடக்கு, கிழக்கு படைச்செறிவு ஆதாரமற்ற குற்றச்சாட்டா?
[Sunday, 28/04/2013 06:27 AM]
வடக்கில் மாகாண சபையா? வட- கிழக்கில் இடைக்கால நிர்வாகமா?- இதயச்சந்திரன்
[Wednesday, 24/04/2013 02:38 PM]
13வது திருத்தச் சட்டமும், இடைக்கால நிலைமாற்று நிர்வாகமும்!- ச. வி. கிருபாகரன்
[Sunday, 21/04/2013 01:42 AM]
காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? - இதயச்சந்திரன்
[Sunday, 21/04/2013 01:40 AM]
எதையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்! அதை எதிரிகளோ வெளித்தரப்புக்களோ தீர்மானிக்க முடியாது!
[Saturday, 20/04/2013 09:58 AM]
'இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது'
[Friday, 12/04/2013 10:10 PM]
சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு: மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து!
[Wednesday, 10/04/2013 02:32 PM]
யானையை பார்த்த குருடர்கள் போல், ஐ. நா. தீர்மானத்தை பார்ப்பது தவறு!
[Sunday, 07/04/2013 03:21 AM]
வடக்கு கிழக்கை குறிவைக்கும் சீனாவின் புலனாய்வு அமைப்பு
[Sunday, 07/04/2013 03:20 AM]
மாணவர் எழுச்சியும் இந்தியாவின் அதிர்ச்சியும் -இதயச்சந்திரன்
[Monday, 25/03/2013 03:13 PM]
சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!
[Sunday, 24/03/2013 03:09 AM]
மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளிப்படுத்துவாரா முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா?
[Sunday, 24/03/2013 02:42 AM]
மாணவர் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன்
[Wednesday, 20/03/2013 04:25 PM]
இலங்கையில் மீண்டும் வலுப்படுத்தப்படும் ஆழ ஊடுருவும் படையணி!
[Sunday, 17/03/2013 07:02 AM]
கை கொடுக்குமா ஐ.நா?
[Thursday, 14/03/2013 08:41 AM]
சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?!- இதயச்சந்திரன்
[Thursday, 14/03/2013 08:31 AM]
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை தொடரப்போகும் அமெரிக்கத் தீர்மானங்கள் - இதயச்சந்திரன்
[Sunday, 10/03/2013 09:51 AM]
ஜெனிவா சுழலில் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்
[Sunday, 10/03/2013 07:20 AM]
நான்கு நகரங்களுக்கு இடையில் நடக்கும் இராஜதந்திர போர்
[Sunday, 03/03/2013 04:43 PM]
அமெரிக்க - இலங்கை உறவு முறிந்து போனது ஏன்?
[Sunday, 03/03/2013 04:49 AM]
அமெரிக்க உத்தியைக் கையாண்டு விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை
[Sunday, 17/02/2013 12:40 AM]
அமெரிக்காவின் இலக்கு என்ன?
[Sunday, 10/02/2013 04:09 PM]
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட சிறிலங்காவின் அதிபர் ராஜபக்ச!
[Sunday, 10/02/2013 04:02 AM]
இலங்கை மீதான அமெரிக்காவின் பார்வையில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Saturday, 09/02/2013 05:24 PM]
யதார்த்தமான உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!- ச. வி. கிருபாகரன்
[Monday, 04/02/2013 02:06 PM]
இலங்கை இராணுவம் வீழ்ச்சியடைந்து வரும் பலம்!
[Sunday, 03/02/2013 04:55 PM]
யாருடைய பக்கம் நிற்கிறது இந்தியா
[Sunday, 03/02/2013 04:43 PM]
இலங்கை இராணுவத்தின் 53வது டிவிஷன் போர்க்குற்ற முத்திரை குத்தப்பட்ட படைப்பிரிவு?
[Sunday, 27/01/2013 02:10 AM]
இந்தியாவின் அரசியல் தீர்மானங்களை முடிவு செய்யும் அதிகாரிகளுக்கு ஓர் திறந்த மடல்!- ச.வி.கிருபாகரன்
[Sunday, 27/01/2013 02:01 AM]
சிறிலங்கா வெற்றிகொண்ட கபடத்தனமான யுத்தம்!- ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Wednesday, 16/01/2013 04:50 AM]
தென்சீனக் கடலில் சீனாவின் நகர்வு என்ன? -இதயச்சந்திரன்
[Tuesday, 15/01/2013 02:49 PM]
ஜெனிவா மிரட்டல்களுக்கு அடிபணியுமா இலங்கை?
[Sunday, 13/01/2013 06:02 AM]
இலங்கை வழங்க விரும்பும் பயிற்சிக்கு வர மறுக்கிறதா இந்தியா?
[Sunday, 06/01/2013 03:07 PM]
ஜெனிவா களத்தில் அமெரிக்கா கை கொடுக்குமா? காலை வாருமா?
[Sunday, 30/12/2012 01:37 PM]
கை கழுவிப் போகும் இலங்கையின் இராணுவ வெற்றி
[Sunday, 30/12/2012 01:35 PM]
சண்டே லீடர் பத்திரிகை! பாதை மாறும் பயணம்?
[Friday, 28/12/2012 12:39 AM]
வெளிச்சத்துக்கு வந்துள்ள இரகசிய கூட்டுப் பயிற்சி
[Sunday, 23/12/2012 09:12 AM]
ஈழ விடுதலை என்பது வெகு தூரத்தில் இருக்காது!
[Sunday, 23/12/2012 02:23 AM]
இந்திய-இலங்கை ஒப்பந்தம்- இந்தியாவின் நற்பெயருக்குத் தோண்டப்பட்ட படுகுழி!
[Sunday, 23/12/2012 02:21 AM]
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி?! - இதயச்சந்திரன்
[Saturday, 22/12/2012 08:33 AM]
தன்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்படுவதை எந்த நாடுமே விரும்பாது!
[Tuesday, 18/12/2012 03:58 PM]
எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது!
[Tuesday, 18/12/2012 03:56 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 5 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
வலம்புரி
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒருபேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
ஈழ நேசன்
ஈழ தேசம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
தாளம் நியூஸ்
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
தமிழ்த்தாய்
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதியஉலகம்
செய்தி
தென்சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைநாதம்
பெரியார் குரல்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
யாழ்மண்
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
பூராயம்
தாய்த் தமிழ்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் போய்ஸ்
பதிவு-2
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
தங்கம்
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
இணுவில்
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
அல்லையூர்
நீர்வேலி
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்...
ஊரெழு மக்கள்...
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
அனைத்துலக தமிழ் வானொலி-GTR
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (sri lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Old Tamil Songs
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
தமிழ்மாலை
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasrinews
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
tamilspeednews
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ்ஜோதி
Movie Lanka
திருட்டுVCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ்விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் பீக்
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2013). Facebook Twitter Youtube