முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் தொடர்புகளுக்கு
2Tamil Home
விண்டோஸ் 7 'Backup and Restore' பற்றிய விளக்கம்
[Wednesday, 09/05/2012 04:43 PM]

நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம்.
 
முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.. இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்த வில்லை எனில், 'Backup' என்பதன் கீழாக 'Windows Backup has not been set up' என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.

இந்த புரோகிராம் தொடங்கியவுடன், உங்கள் பேக் அப் பைல்களை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பேக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கம்ப்யூட்டரில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த வகையில் பேக் அப் பைல்கள் பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என கம்ப்யூட்டர் உங்களைக் கேட்கும். நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை எனில், விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் பைல் ஒன்றை பேக் அப் பைலாக உருவாக்கும். அல்லது, இதற்குப் பதிலாக, Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் பேக் அப் செய்திட விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை யும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பேக் அப் ஆக இருக்கும் பைல்களின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும். பேக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர், விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.

அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால், Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பேக் அப் செயல்பாட்டினை இயக்கவும். முதல்முதலாக பேக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

இதனை அடுத்து எடுக்கப்படும் பேக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால், அடுத்தடுத்து பேக் அப் எடுக்கப்படுகையில், மாற்றம் செய்யப்பட்ட பைல்களில் மட்டுமே பேக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பேக் அப் எடுக்கப்பட்ட பைல்களுடன் வைக்கப்படும்.

பேக் அப்பிலிருந்து பைல்களை மீட்டல்: பேக் அப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து, நம் பைல்களை விரித்து எடுப்பது மிக மிக எளிதான ஒன்றாகும். முதலில், ஏற்கனவே கூறியபடி, Backup and Restore என்ற செயல்பாட்டினை இயக்கவும். இப்போது அனைத்து பைல்களையும் மீட்க வேண்டுமா, அல்லது அழிக்கப்பட்ட, கெட்டுப் போன பைல்கள் மட்டும் மீட்கப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்திட வேண்டும்.

அனைத்து பைல்களையும் மீட்க, Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Browse for folders என கிளிக் செய்திடவும். அடுத்து இடது பக்கம், உங்கள் பேக் அப் பைலுக்குக் கொடுத்த பெயருடன் உள்ள போல்டரைக் காணவும். அதில் கிளிக் செய்து, பின்னர் Add folder என்பதில் கிளிக் செய்திடவும். இந்த போல்டர் இணைக்கப்பட்ட பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு, நீங்கள் மீட்கும் பைல்கள், அவை முன்பு இருந்த இடத்தில் பதியப்பட வேண்டுமா அல்லது புதிய இடத்தில் பதியப்பட வேண்டுமா என்பதனைக் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். இதன் பின்னர், Restore என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்தபடி பைல்கள் மீட்கப்படும்.

குறிப்பிட்ட பைல்களை மட்டும் மீட்க வேண்டும் எனில், Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Browse for files என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் பேக் அப் பைல் போல்டருக்குச் சென்று, நீங்கள் மீட்க விரும்பும் பைலைக் கிளிக் செய்திடவும். இங்கேயும், இந்த பைல்களை, அவை இருந்த பழைய இடத்தில் வைத்திடவா, அல்லது புதிய இடத்தில் வைத்திடவா என்ற கேள்வியினை உங்களிடம் கம்ப்யூட்டர் கேட்கும். இதனை முடிவு செய்து காட்டிய பின்னர், Restore என்பதில் கிளிக் செய்திட, பைல்கள் மீட்கப்படும்.

நீங்கள் மீட்க விரும்பும் பைலின் பெயர் உங்கள் நினைவில் இல்லை எனில், Restore my files கிளிக் செய்த பின்னர்,சர்ச் பட்டனைப் பயன்படுத்தி பைல்களைக் கண்டறியவும். சர்ச் முடிவுகளின் பட்டியலைப் பயன்படுத்தி, நீங்கள் மீட்க விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டவும். இவற்றை நீங்கள் மீட்க விரும்பும் பைல்களின் பட்டியலில் இணைக்கவும். பின் மீண்டும் Restore கிளிக் செய்து மீட்கவும்.
 

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Opera Webkit இணைய உலாவி
[Wednesday, 22/05/2013 09:30 AM]
LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
[Wednesday, 22/05/2013 09:29 AM]
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
[Wednesday, 22/05/2013 09:28 AM]
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
[Wednesday, 22/05/2013 09:27 AM]
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
[Wednesday, 22/05/2013 09:24 AM]
உங்கள் பேஸ்புக் தளம் பாதுகாப்பானதாக அமைய சில வழிகள்
[Tuesday, 21/05/2013 05:48 PM]
விரைவில் வருகிறது 3D மவுஸ்
[Tuesday, 21/05/2013 05:47 PM]
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
[Monday, 20/05/2013 06:07 AM]
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்
[Monday, 20/05/2013 06:06 AM]
Samsung Galaxy S4 கைப்பேசி விரைவில் Google Play தளத்தில்
[Monday, 20/05/2013 06:04 AM]
Google Play Books தரும் புத்தம் புதிய வசதி
[Sunday, 19/05/2013 03:28 AM]
750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்
[Sunday, 19/05/2013 03:27 AM]
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
[Sunday, 19/05/2013 03:25 AM]
Ubuntu இயங்குதளத்துடன் கூடிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது Asus
[Sunday, 19/05/2013 03:24 AM]
அறிமுகமாகியது IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்
[Sunday, 19/05/2013 03:22 AM]
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
[Saturday, 18/05/2013 09:21 AM]
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
[Saturday, 18/05/2013 09:21 AM]
BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகியது
[Friday, 17/05/2013 09:20 AM]
புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது Google +
[Friday, 17/05/2013 09:18 AM]
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி
[Thursday, 16/05/2013 04:27 PM]
அறிமுகமாகின்றது Medias X அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி
[Thursday, 16/05/2013 04:27 PM]
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
[Wednesday, 15/05/2013 04:07 PM]
வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..!
[Tuesday, 14/05/2013 04:54 PM]
அறிமுகமாகின்றது Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன்
[Tuesday, 14/05/2013 04:53 PM]
பார்கோட்ஸின் ரகசியம் தெரியுமா?
[Tuesday, 14/05/2013 04:51 PM]
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!
[Monday, 13/05/2013 09:24 AM]
SkyDrive 250 மில்லியன் பயனர்களை எட்டியது
[Monday, 13/05/2013 09:23 AM]
குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் LeapReader பேனா அறிமுகம்
[Monday, 13/05/2013 09:22 AM]
Huawei அறிமுகப்படுத்தும் Ascend P2 ஸ்மார்ட் கைப்பேசிகள்
[Sunday, 12/05/2013 02:03 PM]
3D டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசித் தயாரிப்பில் அமேஷான்
[Sunday, 12/05/2013 02:02 PM]
பூமி மோதியதினால் சந்திரனில் உருவான தண்ணீர் துகள்கள்: அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு
[Sunday, 12/05/2013 02:01 PM]
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு
[Sunday, 12/05/2013 02:00 PM]
குறைந்த விலையில் அறிமுகமாகும் அன்ரோயிட் டேப்லட்
[Saturday, 11/05/2013 03:15 AM]
Micromax அறிமுகப்படுத்தும் A120 Canvas ஸ்மார்ட் கைப்பேசிகள்
[Saturday, 11/05/2013 03:14 AM]
Sony அறிமுகப்படுத்தும் விண்டோஸ் 8 ஸ்லைடர் டேப்லட்
[Saturday, 11/05/2013 03:13 AM]
Nokia அறிமுகப்படுத்தும் Asha 501 புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
[Saturday, 11/05/2013 03:13 AM]
புதிய அம்சங்களுடன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான YouTube அப்பிளிக்கேஷன் அறிமுகம்
[Saturday, 11/05/2013 03:12 AM]
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
[Saturday, 11/05/2013 03:11 AM]
சி கிளீனர் (CCleaner) புதிய பதிப்பு 4.01 அறிமுகம்..!
[Saturday, 11/05/2013 03:10 AM]
Lumia 925 Catwalk ஸ்மார்ட் கைப்பேசி இம்மாத நடுப்பகுதியில் அறிமுகம்
[Thursday, 09/05/2013 04:41 AM]
24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry Q10 கைப்பேசி
[Thursday, 09/05/2013 04:40 AM]
அமேசான் தளத்தின் அன்னையர் தின அதிரடிக் கழிவில் டேப்லட்
[Thursday, 09/05/2013 04:39 AM]
Sony அறிமுகப்படுத்தும் Vaio Fit நோட்புக் கணனிகள்
[Thursday, 09/05/2013 04:38 AM]
Nokia Lumia 928 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகின
[Thursday, 09/05/2013 04:37 AM]
அப்டேட் ஆன பின் விண்டோஸ் இயங்குதளத்தில் கணணி தானாகவே மறுதொடக்கம் ஆவதை டிசேபிள் செய்ய
[Thursday, 09/05/2013 04:36 AM]
உங்கள் கூகுல் குறோமி பாவனையால் மிகப்பெரிய ஆபத்து..!
[Wednesday, 08/05/2013 10:35 AM]
பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு
[Monday, 06/05/2013 05:05 PM]
400 மில்லியன் கணக்குகளை எட்டியது Outlook.com
[Monday, 06/05/2013 05:04 PM]
புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..!
[Monday, 06/05/2013 05:03 PM]
ஈக்களைப் போன்ற மிகச் சிறிய பறக்கும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு..!
[Monday, 06/05/2013 05:02 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 20 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
வலம்புரி
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒருபேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
ஈழ நேசன்
ஈழ தேசம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
தாளம் நியூஸ்
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
தமிழ்த்தாய்
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதியஉலகம்
செய்தி
தென்சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைநாதம்
பெரியார் குரல்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
யாழ்மண்
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
பூராயம்
தாய்த் தமிழ்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் போய்ஸ்
பதிவு-2
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
தங்கம்
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
இணுவில்
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
அல்லையூர்
நீர்வேலி
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்...
ஊரெழு மக்கள்...
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
அனைத்துலக தமிழ் வானொலி-GTR
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (sri lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Old Tamil Songs
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
தமிழ்மாலை
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasrinews
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
tamilspeednews
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ்ஜோதி
Movie Lanka
திருட்டுVCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ்விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் பீக்
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2013). Facebook Twitter Youtube