முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் தொடர்புகளுக்கு
2Tamil Home
அமெரிக்கா விரித்துள்ள வலை; அச்சத்தில் இலங்கைத் தரப்பு:
[Sunday, 11/03/2012 04:35 AM]

எது நடக்குமென்று நினைத்தோமே அது நடந்துவிட்டது. ஏற்கனவே ஊடகங்களில் கசிந்த அமெரிக்காவின் பிரேரணை, பல திருத்தங்களுடன் கடந்த புதனன்று ஐ.நா. சபை, மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அப்பிரேரணையின் மையப் பொருள்.
 
பலரும் எதிர்பார்த்தது போன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயற்படுத்துமாறு இப் பிரேரணை கோரவில்லை. ஆகவே, இப் பிரேரணை அரசைப் பொறுத்தவரை சற்று ஆறுதலான விடயமே.

ஆனாலும் பரிந்துரைகளை நிறைவேற்றுங்களென்ற ஆலோசனைபோல் இது அமைந்திருந்தால், இலங்கை அரசு கவலையடைந்திருக்காது. 22 ஆவது கூட்டத் தொடரில் இது பற்றிப் பேசுவோம் என்கிற வகையில் அமைந்திருப்பதுதான், வலையொன்று தம்மைச் சுற்றி பின்னப்படுகிறது என்கிற கலக்கத்தை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

"இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்' என்கிற தலைப்பிட்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த நகல் பிரேரணை, விவாதத்திற்கு வரும்போது மாற்றத்திற்கு உள்ளாக்கப்படலாம்.

பயங்கரவாத முறியடிப்பில் ஈடுபடும் ஒரு அரசானது, அனைத்துலக மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் அகதிகள் குறித்த விடயங்களில் சர்வதேச சட்ட விதிகளை மீள் உறுதி செய்ய வேண்டும் எனச் சுட்டிக் காட்டும் இப் பிரேரணை, நல்லிணக்க ஆணைக்குழுவினால் கூறப்பட்ட பரிந்துரைகள் சாத்தியமான பங்களிப்பினை வழங்குமெனக் குறிப்பிடுகிறது.

இருப்பினும் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், அத்தோடு வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணித் தகராறு தொடர்பான பிரச்சினைக்கு நடுநிலையான பொறிமுறையொன்றை நிறுவுதல் என நீண்டு செல்லும் இப் பிரேரணை, அரசியல் தீர்வு குறித்து பேசும் போது, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் தேவை என்கிறது.

ஆனாலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேச சட்ட விதிகள் மோசமாக மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக போதுமான அளவு கவனம் செலுத்தப்படவில்லையெனக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.

அதேவேளை, மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகமானது, பொருத்தமான விசேட செயல்முறைகளை அரசுக்கு வழங்குவதோடு, அதனை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள விவகாரமே நெருக்கடி நிலையைத் தோற்றுவிக்கப் போகின்றது.

அத்தோடு 22ஆவது கூட்டத் தொடரில் அது குறித்தான அறிக்கையை ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் இலங்கைத் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பதுதான் இங்குள்ள முதன்மையான பிரச்சினை.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இலங்கையில் செயற்பட்ட காலத்தில், ஐ.நா. சபையின் கண்காணிப்பகம் ஒன்றினை கொழும்பில் நிறுவிட அன்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசு அதனை முற்றாக நிராகரித்தது.

உள்நாட்டுப் பிரச்சினையில் எந்தவொரு சர்வதேச அமைப்பினது தலையீடு தேவையற்றதெனவும், அதன் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் நகர்வாக அது அமையுமென்றும் ஆட்சியாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

ஆகவே, பிரேரணை குறித்து அமெரிக்கா, வியாழன்று வெளிக்களவிவாதமொன்றினை மேற்கொண்டபோது அங்கு பேசிய முன்னாள் சட்டமாஅதிபர் மொஹான் பீரிஸ், இப்பிரேரணையானது இலங்கையின் இறைமைக்கு விடப்படும் சவால் என்று குறிப்பிட்ட விடயம் பழைய நிலைப்பாட்டினை மீளவும் உறுதிப்படுத்துகிறதெனலாம்.

இவை தவிர ஜெனீவாவின் ஐக்கிய நாடுகளிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் வழங்கும் மரதன் ஓட்ட நேர்காணல்கள் இறைமை குறித்துப் பேசுவதோடு, வல்லரசு நாடுகள் மனித உரிமைப் பேரவையை வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்கிற புவிசார் அரசியலையும் இணைத்துக் கூறுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இதில் இலங்கை என்பது வளர்முக நாடா? என்கிற கேள்விக்கு அப்பால், அமெரிக்க எதிர்ப்பு அணிகளை தமக்குச் சார்பாகத் திருப்பும் தந்திரோபாயம் அவர் உரைகளில் தென்படுவதையே காண முடிகிறது.

ஆகவே, பிளவுபட்ட முகாம்களுக்கிடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தி இறைமை, உள்நாட்டுப் பிரச்சினை என்கிற சொல்லாடல்களுக்கூடாக இன அழிப்புக் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து விடலாமென்கிற வகையிலேயே தனது இராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறது இலங்கை அரசு.

இருப்பினும் ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகித்தாலும், தானொரு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நாடெனக் கூற முற்படும் இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் கைச்சாத்திட்டது ஏன் என்பது புரியவில்லை.

அதேவேளை, வருகிற 14 ஆம் திகதி சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள இலங்கைக் கொலைக் களத்தின் இரண்டாம் பாகமான "தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற ஆவணம் வெளிவரும் போது, இலங்கை அரசின் ஆவேச வெளிப்பாடு இன்னும் அதிகமாகலாம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் எனக் கூறும் அமெரிக்கப் பிரேரணையும் பல சவால்களை எதிர்நோக்கலாம்.

அதேவேளை, பிரேரணையினை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றுவதனூடாக எதனைச் சாதிக்க முற்படுகிறது அமெரிக்கா என்பது குறித்துப் பார்க்க வேண்டும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனடிப்படையில் இப்ப பிரேரணை நகர்வு முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பரவலாக உரையாடப்படும் "முத்துமாலைத் திட்டம்' ஊடாக, துறைமுக அபிவிருத்திப் பணி என்கிற போர்வையில் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற இந்தியாவைச் சூழவுள்ள தென் கிழக்காசிய நாடுகளில் கால் பதித்துள்ளது சீனா.

இதன் அடுத்த கட்டமாக, படைத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் சீனா, அணு ஆயுத ஏவுகணைகளைத் தாங்கி நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான தளங்களை, மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளின் துறைமுகங்களில் நிறுவி விடலாம் என்கிற எச்சரிக்கைச் செய்தி, இந்திய "ரோ' விற்கும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இற்கும் எட்டுகிறது.

ஆகவே மலாக்கா நீரிணைக்கு அப்பாலும், இந்து சமுத்திர பிராந்தியக் கடல் பரப்பிலும், சீனாவின் நடமாட்டத்தை இல்லாதொழிப்பதற்கு இப்போதே தனது இறுக்கமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

ஆயினும் இலங்கை சீன உறவுத் தளம் வலுடைவதை அவதானிக்கும் மேற்குலகம், இதனை முறியடிக்கும் வகையில் பாரிய அழுத்தங்களை இலங்கை மீது ஒரேயடியாகப் பிரயோகிக்க தற்போது விரும்பவில்லை.

இலங்கை குறித்தான இந்தியாவின் மென்போக்கும் அதற்கொரு காரணியாக அமைகிறதெனலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை, மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை என்கிற பாதைகள் ஊடாகவே முதற்கட்டமாக இலங்கையை அணுக முற்படுவதைப் பார்க்க வேண்டும்.

இதனை வரவேற்று பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அறிக்கை விடுகின்றன.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலைப் புரிந்து கொண்டு இவ்வாறான வாழ்த்துச் செய்திகளைத் தெரிவிக்கின்றார்களா? அல்லது மாற்று வழியின்றி அதனையே தமது இராஜதந்திரமென்று ஏற்றுக் கொள்கிறார்களா என்று புரியவில்லை.

பிரேரணையில் கிழக்கைப் பற்றிக் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டு வடக்கில் இராணுவ பிரசன்னத்தை அகற்ற வேண்டுமெனவும், வட -கிழக்கு இணைப்புக் குறித்து பேசாமல் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டுமென்று கூறுவதை இவர்கள் வரவேற்கின்றார்களா என்கிற கேள்வி எழுகின்றது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நடைமுறை சார்ந்த விடயங்கள், தமிழ் மக்களுக்கு சாதகமாக இருப்பதுபோல் தென்பட்டாலும், பிறப்புரிமையான தாயகக் கோட்பாடு மற்றும் இறைமையோடு கூடிய அதிகாரம் என்கிற முக்கிய விவகாரங்களை இப் பிரேரணை உள்வாங்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

'அவர்கள் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை' என்பதற்காக கீழிறங்கிச் செல்லாமல், நிரந்தரத் தீர்வொன்றிற்கான எமது கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக முன் வைப்பதே பொருத்தமானதாகும். ஏனெனில் சர்வதேச வல்லரசாளர்களின் நலன் வேறு தமிழ் மக்களின் நலன் வேறு என்பதைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை.

எது எவ்வாறு இருப்பினும், பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிக்கும் பங்காளிகளாக மனித உரிமைப் பேரவையை இணைத்துக் கொள்ள வேண்டுமென குறிபிடப்பட்ட செய்தியே, முறுகல் நிலையை தோற்றுவித்து, அடுத்த 22 ஆவது கூட்டத் தொடரில் பல விவாதங்களை உருவாக்க வழிசமைக்கும் போல் தெரிகிறது.

எதற்கும் அசைந்து கொடுக்காத நிலைப்பாட்டினை இலங்கை அரசு மேற்கொண்டால், அடுத்த கட்டத்தில், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடிய சாத்தியப்பாடுகளுமுண்டு.

ஆனாலும் இப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, பரிந்துரைகளை நிறைவேற்ற மனித உரிமைப் பேரவையின் ஆலோசனைகள் தேவையில்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டால் இலங்கை அரசின் மேற்குலகிற்கு எதிரான போக்கு தணிவடையும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தாய்நாட்டிற்கு எதிராக செயற்படும் "வெளிநாட்டுச் சக்திகளைத் தோற்கடிப்போம்' என்கிற கையெழுத்துப் போராட்டமும் ஓய்ந்து போகும். இருப்பினும், அமெரிக்கா வழங்கவுள்ள ஒரு வருட கால தவணை என்பது அரசிற்கெதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை வலுப்படுத்த உதவும் போல் தெரிகிறது.

-இதயச்சந்திரன்-

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும், இலங்கையும்!
[Tuesday, 14/05/2013 04:29 PM]
அதிகாரத்துடன், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வார்!- ச. வி. கிருபாகரன்
[Sunday, 12/05/2013 01:54 PM]
மாலைதீவில் அமெரிக்கத் தளம்! இலங்கைக்கு அடிக்கும் காய்ச்சல்!
[Sunday, 12/05/2013 04:28 AM]
புலனாய்வு அமைப்புகளின் மோது களமாகியுள்ள இலங்கை!
[Monday, 06/05/2013 09:39 AM]
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? -இதயச்சந்திரன்
[Sunday, 05/05/2013 11:42 AM]
வடக்கு, கிழக்கு படைச்செறிவு ஆதாரமற்ற குற்றச்சாட்டா?
[Sunday, 28/04/2013 06:27 AM]
வடக்கில் மாகாண சபையா? வட- கிழக்கில் இடைக்கால நிர்வாகமா?- இதயச்சந்திரன்
[Wednesday, 24/04/2013 02:38 PM]
13வது திருத்தச் சட்டமும், இடைக்கால நிலைமாற்று நிர்வாகமும்!- ச. வி. கிருபாகரன்
[Sunday, 21/04/2013 01:42 AM]
காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? - இதயச்சந்திரன்
[Sunday, 21/04/2013 01:40 AM]
எதையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்! அதை எதிரிகளோ வெளித்தரப்புக்களோ தீர்மானிக்க முடியாது!
[Saturday, 20/04/2013 09:58 AM]
'இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது'
[Friday, 12/04/2013 10:10 PM]
சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு: மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து!
[Wednesday, 10/04/2013 02:32 PM]
யானையை பார்த்த குருடர்கள் போல், ஐ. நா. தீர்மானத்தை பார்ப்பது தவறு!
[Sunday, 07/04/2013 03:21 AM]
வடக்கு கிழக்கை குறிவைக்கும் சீனாவின் புலனாய்வு அமைப்பு
[Sunday, 07/04/2013 03:20 AM]
மாணவர் எழுச்சியும் இந்தியாவின் அதிர்ச்சியும் -இதயச்சந்திரன்
[Monday, 25/03/2013 03:13 PM]
சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!
[Sunday, 24/03/2013 03:09 AM]
மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளிப்படுத்துவாரா முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா?
[Sunday, 24/03/2013 02:42 AM]
மாணவர் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன்
[Wednesday, 20/03/2013 04:25 PM]
இலங்கையில் மீண்டும் வலுப்படுத்தப்படும் ஆழ ஊடுருவும் படையணி!
[Sunday, 17/03/2013 07:02 AM]
கை கொடுக்குமா ஐ.நா?
[Thursday, 14/03/2013 08:41 AM]
சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?!- இதயச்சந்திரன்
[Thursday, 14/03/2013 08:31 AM]
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை தொடரப்போகும் அமெரிக்கத் தீர்மானங்கள் - இதயச்சந்திரன்
[Sunday, 10/03/2013 09:51 AM]
ஜெனிவா சுழலில் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்
[Sunday, 10/03/2013 07:20 AM]
நான்கு நகரங்களுக்கு இடையில் நடக்கும் இராஜதந்திர போர்
[Sunday, 03/03/2013 04:43 PM]
அமெரிக்க - இலங்கை உறவு முறிந்து போனது ஏன்?
[Sunday, 03/03/2013 04:49 AM]
அமெரிக்க உத்தியைக் கையாண்டு விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை
[Sunday, 17/02/2013 12:40 AM]
அமெரிக்காவின் இலக்கு என்ன?
[Sunday, 10/02/2013 04:09 PM]
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட சிறிலங்காவின் அதிபர் ராஜபக்ச!
[Sunday, 10/02/2013 04:02 AM]
இலங்கை மீதான அமெரிக்காவின் பார்வையில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Saturday, 09/02/2013 05:24 PM]
யதார்த்தமான உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!- ச. வி. கிருபாகரன்
[Monday, 04/02/2013 02:06 PM]
இலங்கை இராணுவம் வீழ்ச்சியடைந்து வரும் பலம்!
[Sunday, 03/02/2013 04:55 PM]
யாருடைய பக்கம் நிற்கிறது இந்தியா
[Sunday, 03/02/2013 04:43 PM]
இலங்கை இராணுவத்தின் 53வது டிவிஷன் போர்க்குற்ற முத்திரை குத்தப்பட்ட படைப்பிரிவு?
[Sunday, 27/01/2013 02:10 AM]
இந்தியாவின் அரசியல் தீர்மானங்களை முடிவு செய்யும் அதிகாரிகளுக்கு ஓர் திறந்த மடல்!- ச.வி.கிருபாகரன்
[Sunday, 27/01/2013 02:01 AM]
சிறிலங்கா வெற்றிகொண்ட கபடத்தனமான யுத்தம்!- ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Wednesday, 16/01/2013 04:50 AM]
தென்சீனக் கடலில் சீனாவின் நகர்வு என்ன? -இதயச்சந்திரன்
[Tuesday, 15/01/2013 02:49 PM]
ஜெனிவா மிரட்டல்களுக்கு அடிபணியுமா இலங்கை?
[Sunday, 13/01/2013 06:02 AM]
இலங்கை வழங்க விரும்பும் பயிற்சிக்கு வர மறுக்கிறதா இந்தியா?
[Sunday, 06/01/2013 03:07 PM]
ஜெனிவா களத்தில் அமெரிக்கா கை கொடுக்குமா? காலை வாருமா?
[Sunday, 30/12/2012 01:37 PM]
கை கழுவிப் போகும் இலங்கையின் இராணுவ வெற்றி
[Sunday, 30/12/2012 01:35 PM]
சண்டே லீடர் பத்திரிகை! பாதை மாறும் பயணம்?
[Friday, 28/12/2012 12:39 AM]
வெளிச்சத்துக்கு வந்துள்ள இரகசிய கூட்டுப் பயிற்சி
[Sunday, 23/12/2012 09:12 AM]
ஈழ விடுதலை என்பது வெகு தூரத்தில் இருக்காது!
[Sunday, 23/12/2012 02:23 AM]
இந்திய-இலங்கை ஒப்பந்தம்- இந்தியாவின் நற்பெயருக்குத் தோண்டப்பட்ட படுகுழி!
[Sunday, 23/12/2012 02:21 AM]
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி?! - இதயச்சந்திரன்
[Saturday, 22/12/2012 08:33 AM]
தன்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்படுவதை எந்த நாடுமே விரும்பாது!
[Tuesday, 18/12/2012 03:58 PM]
எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது!
[Tuesday, 18/12/2012 03:56 PM]
தொடரும் கே.பியின் லீலைகள் - அனலை நிதிஸ் ச. குமாரன்
[Tuesday, 11/12/2012 07:16 PM]
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? - இதயச்சந்திரன்
[Saturday, 08/12/2012 03:31 AM]
தான்தோன்றித் தனமாக உளறும் கே.பி: அனலை நிதிஸ் ச. குமாரன்
[Tuesday, 04/12/2012 02:56 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 4 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
வலம்புரி
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒருபேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
ஈழ நேசன்
ஈழ தேசம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
தாளம் நியூஸ்
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
தமிழ்த்தாய்
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதியஉலகம்
செய்தி
தென்சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைநாதம்
பெரியார் குரல்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
யாழ்மண்
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
பூராயம்
தாய்த் தமிழ்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் போய்ஸ்
பதிவு-2
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
தங்கம்
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
இணுவில்
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
அல்லையூர்
நீர்வேலி
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்...
ஊரெழு மக்கள்...
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
அனைத்துலக தமிழ் வானொலி-GTR
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (sri lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Old Tamil Songs
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
தமிழ்மாலை
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasrinews
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
tamilspeednews
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ்ஜோதி
Movie Lanka
திருட்டுVCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ்விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் பீக்
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2013). Facebook Twitter Youtube